» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் : மத்திய அமைச்சரிடம் பயணிகள் நலச் சங்கம் மனு!
சனி 14, மார்ச் 2026 5:00:10 PM (IST)

தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் பயணிகள் நலச் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சார்பில், மத்திய இணை அமைச்சர் எல். முருகனிடம் தூத்துக்குடி ரயில் நிலைய மேம்பாடு மற்றும் புதிய ரயில் சேவைகள் குறித்த கோரிக்கை மனு இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், தூத்துக்குடி – கச்சிகுடா (செகந்திராபாத்) இடையே புதிய வாராந்திர ரயிலை அறிமுகப்படுத்தியதற்காக மத்திய அரசுக்கும், அமைச்சருக்கும் சங்கத்தின் சார்பில் முதலில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாவட்டத்தின் முக்கியத் தேவைகளாகக் கருதப்படும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
• வந்தே பாரத் ரயில்: தூத்துக்குடி மற்றும் சென்னை இடையே பயண நேரத்தைக் குறைக்கும் வகையில், 'வந்தே பாரத்' விரைவு ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.
• மேட்டுப்பாளையம் ரயில்: தற்போது வாரம் இருமுறை இயக்கப்படும் தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் ரயிலைப் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்.
• ரயில் நீட்டிப்பு: திருநெல்வேலி – கன்னியாகுமரி ரயிலையும், மும்பை லோக்மான்யா திலக் – மதுரை ரயிலையும் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல், திருச்சி – விருதுநகர் ரயிலையும் தூத்துக்குடி வரை நீட்டிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
• பாலருவி எக்ஸ்பிரஸ்: தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயங்கும் பாலருவி விரைவு ரயிலில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டிகளை (A/C Coach) உடனடியாக இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த மத்திய அமைச்சர் எல். முருகன் , இது குறித்து ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்வின் போது, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் மா. பிரமநாயகம் மற்றும் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்: நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 2:07:23 PM (IST)

தொழிலதிபரிடம் ரூ.25 கோடி மோசடி : நெல்லை திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:47:30 AM (IST)

பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதி தகுதி தளர்வு - ஆட்சியர் தகவல்!
சனி 14, மார்ச் 2026 5:38:31 PM (IST)

சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 10:59:20 AM (IST)

நெல்லையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 14, மார்ச் 2026 8:43:47 AM (IST)

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, தேர்தல் கூட்டங்கள் : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 13, மார்ச் 2026 5:41:13 PM (IST)


தூத்துக்குடிக்காரன்Mar 15, 2026 - 10:16:53 AM | Posted IP 172.7*****