» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்கச் சிறப்பு குழு: ஆட்சியர் தகவல்!

திங்கள் 23, மார்ச் 2026 4:38:08 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையப் பணிகளைக் கண்காணிக்கச் சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் பிசானம் 2025 பருவத்தில் பயிர் செய்யப்பட்ட நெல்லைக் கொள்முதல் செய்ய 75 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 44 கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாகவும், 31 கொள்முதல் நிலையங்கள் இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) நிறுவனம் மூலமாகவும் செயல்பட்டு வருகின்றன.

இவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு வாணிபக் கழகம், இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களைக் கொண்ட சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நெல் கொள்முதல் பணி நிறைவடையும் வரை, வாரத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்வார்கள். முறைகேடுகள் அல்லது புகார்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார்களைத் தெரிவிக்க வேண்டிய எண்கள்:

மண்டல மேலாளர் (TNCSC, திருநெல்வேலி): 9443695551

மண்டல மேலாளர் (NCCF): 9345604043

ஒருங்கிணைப்பாளர் (NCCF, சென்னை): 9345758933

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 599 3540

மேலும், ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் உயர் அலுவலர்களின் எண்கள் அடங்கிய அறிவிப்புப் பதாகைகளும், புகார் பெட்டியும் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வட்டார அளவிலான தொடர்பு எண்கள்:

வட்டார அளவில் நெல் கொள்முதல் நிலையக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய விவசாயிகள் கீழ்க்கண்ட அலுவலர்களைத் தொடர்புகொள்ளலாம்:

அம்பாசமுத்திரம்: TNCSC கொள்முதல் அலுவலர்கள்: பிரகாஷ் (8122745119), இளையராஜா (9789548321)

NCCF கொள்முதல் அலுவலர்: பிரவீன் (9344569946)

வேளாண்மை உதவி இயக்குநர்: 7373232525

சேரன்மகாதேவி மற்றும் பாப்பாக்குடி: TNCSC கொள்முதல் அலுவலர்: பிரகாஷ் (8122745119)

NCCF கொள்முதல் அலுவலர்: கார்த்திக் (9025114946)

வேளாண்மை உதவி இயக்குநர் (சேரன்மகாதேவி): 89039 25406

வேளாண்மை உதவி இயக்குநர் (பாப்பாக்குடி): 94435 40426

திருநெல்வேலி மற்றும் மானூர்: TNCSC கொள்முதல் அலுவலர்: சபரிதேவி (8056350661)

NCCF கொள்முதல் அலுவலர்: கார்த்திக் (9025114946)

வேளாண்மை அலுவலர் (மானூர்): 9787241421

பாளையங்கோட்டை: TNCSC கொள்முதல் அலுவலர்: அண்ணாதுரை (976461066)

NCCF கொள்முதல் அலுவலர்: சதிஷ் குமார் (7871428740)

வேளாண்மை உதவி இயக்குநர்: 7598157321

நாங்குநேரி மற்றும் களக்காடு: TNCSC கொள்முதல் அலுவலர்: ரமேஷ் (9750517065)

NCCF கொள்முதல் அலுவலர்: கார்த்திக் (9025114946)

வேளாண்மை உதவி இயக்குநர் (நாங்குநேரி): 94455 20273

வேளாண்மை உதவி இயக்குநர் (களக்காடு): 63694 94481

இராதாபுரம் மற்றும் வள்ளியூர்: TNCSC கொள்முதல் அலுவலர்: ரமேஷ் (9750517065)

வேளாண்மை உதவி இயக்குநர் (இராதாபுரம்): 94867 57429

வேளாண்மை உதவி இயக்குநர் (வள்ளியூர்): 97506 82505


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory