» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:17:22 PM (IST)
திருநெல்வேலி அருகே தனியார் காகித ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காகித பண்டல்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், இன்று 2-வது நாளாகத் தீயணைப்புப் பணிகள் தீவிரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி அருகே வடுகம்பட்டியில் உள்ள தனியார் காகித ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய காகித பண்டல்கள் எரிந்து சாம்பலாகின. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 2-வது நாளாகத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை அடுத்த கல்லூர் அருகே வடுகம்பட்டியில் இயங்கி வரும் தனியார் காகித ஆலையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று மதியம் சுட்டெரித்த வெயில் மற்றும் பலத்த காற்று காரணமாக, ஆலையின் ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய காகித பண்டல்களில் திடீரெனத் தீப்பற்றி, நாலாபுறமும் மளமளவெனப் பரவியது.
தீயணைப்பு வீரர்களின் போராட்டம்:
தகவலறிந்த மாவட்டத் தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையில் பேட்டை, நெல்லை, டவுன் மற்றும் சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நேற்றிரவு முழுவதும் தீவிரமாகத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், இன்று 2-வது நாளாகத் தீயணைப்புப் பணிகள் தீவிரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் சுமார் 25,000 டன் பழைய காகித பண்டல்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட மதிய நேரத்தில் தொழிலாளர்கள் உணவு அருந்தச் சென்றிருந்ததால், நல்வாய்ப்பாகப் உயிர்ச்சேதம் மற்றும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. சீதபற்பநல்லூர் காவல்துறையினர் மற்றும் நெல்லை தாசில்தார் மாரிமுத்து குமார் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.
வானுயர எழும்பிய கரும்புகை நெல்லை மற்றும் சேரன்மாதேவி வரை தென்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தீ விபத்துக்கான காரணம் குறித்துச் சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

உலக புகைப்பட தினம்: நெல்லை புகைப்படக் கலை சங்கத்தினர் ரத்ததானம்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:41:48 PM (IST)

ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர் கைது: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:28:19 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி: ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 8:42:51 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயிலில் சுவாமி மாலையைத் தன் கழுத்தில் அணிந்த பூசாரி சஸ்பெண்ட்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 12:15:13 PM (IST)

கூடங்குளம் அணு உலையில் வடிகால் அமைப்பிற்குள் நுழைந்த ஜெல்லி மீன்கள்: மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 8:33:58 AM (IST)


