» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ஆம் தேதி நெல்லையில் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
புதன் 25, மார்ச் 2026 5:48:47 PM (IST)
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு ஆணை எண்: 708, பொது (பல்வேறு) துறை, நாள்: 11.11.2012 மற்றும் அரசு ஆணை எண்: 1, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (VI) துறை, நாள்: 03.01.2012 ஆகியவற்றின் படியும்; தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கடித எண்: ஆர்3/118/2024, நாள்: 05.03.2026-ன் படியும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் அனைத்து மதுபானக் கடைகளும் (FL1 உரிமங்கள்) மற்றும் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்களும் (பார்கள்) மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், தங்கும் விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற அனைத்து மதுக்கூடங்களும் அன்றைய தினம் முழுமையாக மூடப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. விதியை மீறி யாரேனும் மதுபானங்களை விற்பனை செய்ய முயன்றால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:17:22 PM (IST)

உலக புகைப்பட தினம்: நெல்லை புகைப்படக் கலை சங்கத்தினர் ரத்ததானம்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:41:48 PM (IST)

ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர் கைது: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:28:19 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி: ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 8:42:51 AM (IST)


