» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சுற்றுச்சுழல் பாதிப்பில்லாத தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
புதன் 1, ஏப்ரல் 2026 4:01:03 PM (IST)

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என்று திமுக வேட்பாளர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், "தமிழக முதலமைச்சர் கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டங்களால், தமிழகம் இன்று இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
தூத்துக்குடி அருகே உள்ள அல்லிகுளம் சிப்காட் வளாகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான சிறப்புப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சியில் விடுபட்ட 15, 16, 17, 18 ஆகிய 4 வார்டுகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்.
நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் பல்வேறு இணைப்புச் சாலைகள் அமைக்கப்படும். தூத்துக்குடியில் எக்காரணம் கொண்டும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான தொழிற்சாலைகளே கொண்டு வரப்படும் என அவர் உறுதி அளித்தார்.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சி.வி. சண்முகம், வடக்கு மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கரும்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் விமல் வெங்காலியார் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
தமிழ்ச்செல்வன்Apr 1, 2026 - 09:26:53 PM | Posted IP 172.7*****
அதிமுக ஆட்சி அனுமதி அளித்த உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்த மேலும் 600 ஏக்கர் வழங்கிய திமுக சொல்லுது.... இத நாங்க நம்பணும்... நீங்க பணத்திற்காக என்ன வேணும்ன்னாலும் செய்வீங்க என்பது எங்களுக்குத் தெரியாதா?
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:23:45 AM (IST)

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா... பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 10:44:09 AM (IST)

பேருந்து மோதி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு: திருவிழாவிற்கு வந்த இடத்தில் சோகம்
சனி 4, ஏப்ரல் 2026 8:53:59 AM (IST)

கடன் கேட்ட நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: குடிபோதையில் வெறிச்செயல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:47:35 AM (IST)

நெல்லையில் 100 அடி நீளத் துணியில் தேர்தல் ஓவியம்: மாணவ, மாணவிகள் அசத்தல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:16:59 PM (IST)


ஓட்டு போட்ட முட்டாள்Apr 3, 2026 - 08:38:16 AM | Posted IP 172.7*****