» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக விஷு மகாஜன் பொறுப்பேற்பு
வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:54:10 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த இளம்பகவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்ததாவது: இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளேன். வரலாற்று சிறப்புமிக்க மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பணி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 –யை சுதந்திரமாகவும், நியாயமாகவும் மற்றும் அமைதியான முறையில் நடத்துவதாகும்.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணியில் அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை தருமாறும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து பொதுமக்களும் தங்களுடைய வாக்குரிமையை பயன்படுத்தி 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் பணிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் மற்றும் விதிகளின்படி செய்யப்பட்டு வருகின்றன. அந்த அறிவுறுத்தல் மற்றும் விதிகளின்படி மாவட்ட நிலையிலான அலுவலர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்றினைந்து செயல்பட்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 யினை சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:23:45 AM (IST)

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா... பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 10:44:09 AM (IST)

பேருந்து மோதி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு: திருவிழாவிற்கு வந்த இடத்தில் சோகம்
சனி 4, ஏப்ரல் 2026 8:53:59 AM (IST)

கடன் கேட்ட நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: குடிபோதையில் வெறிச்செயல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:47:35 AM (IST)

நெல்லையில் 100 அடி நீளத் துணியில் தேர்தல் ஓவியம்: மாணவ, மாணவிகள் அசத்தல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:16:59 PM (IST)

