» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அமைச்சர் பெ. மதன்ராஜா தூத்துக்குடி வருகை: மாவட்ட ஆட்சியர், எஸ்பி வரவேற்பு!

வியாழன் 28, மே 2026 5:39:27 PM (IST)



தமிழகக் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறை அமைச்சர் பெ. மதன்ராஜா இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்குத் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த அமைச்சர் பெ. மதன்ராஜாவுக்கு, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மலர்க்கொத்து வழங்கி இன்முகத்தோடு வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா  அமைச்சருக்கு மலர்க்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினார்.

மாநகராட்சியின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா அமைச்சருக்குப் புத்தகம் ஒன்றைப் பரிசாக வழங்கி வரவேற்றார். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன் மலர்க்கொத்து வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்த எளிய வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன.


மக்கள் கருத்து

உண்மை விளம்பிமே 28, 2026 - 09:58:21 PM | Posted IP 104.2*****

நகர மேயர் அமைச்சரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கவில்லையா! மேயர் தூ.டி மக்களின் பிரதிநிதியாயிற்றே!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory