» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் தடையற்ற குடிநீர் விநியோகம் தொடர மேயர் அதிரடி நடவடிக்கை - நள்ளிரவிலும் ஆய்வு!
சனி 11, ஜூலை 2026 10:19:03 AM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் தொடர்பாக நள்ளிரவிலும் மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
தொடர் மின்வெட்டு மற்றும் வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீர் வறட்சி காரணமாகத் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகக் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப் பிரச்சினையை விரைந்து சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நள்ளிரவில் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்தார். இரவு 11:00 மணிக்குத் தொடங்கி அதிகாலை 1:30 மணி வரை தனசேகரன் நகர், குறிஞ்சி நகர், பக்கீல் ஓடை பகுதி, கேவிகே நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 9 தெருக்களில் விநியோகிக்கப்படும் குடிநீர் விநியோகத்தை அவர் வீடு வீடாகச் சென்று பார்வையிட்டார்.
ஒவ்வொரு வீட்டின் குடிநீர் இணைப்பையும் திறந்து பார்த்துத் தண்ணீர் தடையின்றி வருகிறதா என ஆய்வு செய்த மேயர், இனி வரும் நாட்களிலும் இதே போன்று தடையற்ற குடிநீர் விநியோகம் தொடரும் எனப் பொதுமக்களிடம் உறுதியளித்தார். நள்ளிரவு என்றும் பாராமல் மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக வீடுகளின் காலிங் பெல் அடித்துத் தண்ணீர் விநியோகம் குறித்துக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு மாநகரப் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்டார் 3.0 மென்பொருள் கலந்துரையாடல்: பத்திரம் எழுத்தர்களுக்குச் சார் பதிவாளர் ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:12:23 PM (IST)

பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம்: முதல்வர் விஜய்க்கு அப்பாவு கண்டனம்!
சனி 11, ஜூலை 2026 5:15:59 PM (IST)

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி உள்பட 72 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
சனி 11, ஜூலை 2026 12:02:46 PM (IST)

திருமாவளவன் குறித்த நோபல் பரிசு கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்: வைகோ பேட்டி!
வெள்ளி 10, ஜூலை 2026 8:49:57 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா துவக்கம்: 12-ஆம் தேதி வளைகாப்பு உற்சவம்!
வெள்ளி 10, ஜூலை 2026 8:37:22 AM (IST)

நெல்லையில் ரூ.15,037 கோடியில் சோலார் ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
வியாழன் 9, ஜூலை 2026 3:48:41 PM (IST)



தமிழன்Jul 11, 2026 - 12:23:52 PM | Posted IP 172.7*****