» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்க நடவடிக்கை : ஆட்சியரிடம் கோரிக்கை!

திங்கள் 17, ஆகஸ்ட் 2026 11:56:24 AM (IST)



கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படவில்லை எனக் கூறி, தூத்துக்குடியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தூத்துக்குடி சில்வர்புரம் மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பில் வசித்து வரும் பார்வை மாற்றுத்திறனாளிகள் 15 பேர், ராமலட்சுமி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அந்த மனுவில்: தமிழக அரசால் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் செல்போன், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்களுக்கு வழங்கப்படவில்லை.  இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை மனு அளித்தும்கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பார்வை மாற்றுத்திறனாளிகளான தங்களுக்கு உடனடியாக இலவசச் செல்போன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை அழைத்து இது குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில், "இந்த மாதம் வரப்பெறும் செல்போன்கள் இவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்" என்று ஆட்சியர் உறுதியளித்தார். ஆட்சியரின் இந்த அறிவிப்பையடுத்துப் பார்வை மாற்றுத்திறனாளிகள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து

க.கணேசன்.Aug 18, 2026 - 09:09:21 PM | Posted IP 162.1*****

மாவட்ட ஆட்சியருக்கு மிக்க நன்றி.வாழ்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory