» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:53:27 AM (IST)
கருங்கல் பெத்லகேம் நர்சிங் கல்லூரியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர் ஷீஜாவைத் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள கத்திப்பாறை பகுதியைச் சேர்ந்த ஆஞ்சிசி என்ற மாணவி, கருங்கல் பெத்லகேம் நர்சிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 14 அன்று, கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டார்.
மாணவி கல்லூரியில் செல்போன் பயன்படுத்தியதாகக் கூறி, கல்லூரி முதல்வர் ஷீஜா மற்ற மாணவிகள் முன்னிலையில் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கருங்கல் காவல்துறையினர் கல்லூரி முதல்வர் ஷீஜா மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டுப் பெற்றோர்களும் மாணவ-மாணவிகளும் கல்லூரியின் முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இச்சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது. இதனிடையே முதல்வர் ஷீஜா தலைமறைவானார். அவரைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், கிருஷ்ணகிரி அருகே பர்கூரில் உள்ள உறவினர் வீட்டில் அவர் ஒளிந்திருந்தது தெரியவந்தது.
அங்கு விரைந்த தனிப்படை போலீசார் ஷீஜாவைக் கைது செய்தனர். அவர் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த 6 வயது மகனைத் தனியாக விட முடியாது என்பதால், சிறுவனையும் அழைத்து வந்து கருங்கல்லில் உள்ள ஷீஜாவின் மாமியாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "தான் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்கவில்லை; கல்லூரி நிர்வாகத்தின் அறிவுரைப்படியே செயல்பட்டேன்" எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தொடர் போராட்டம் காரணமாகக் கல்லூரிப் பராமரிப்புப் பணிகளுக்காக ஆகஸ்ட் 19 வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, வரும் ஆகஸ்ட் 23 வரை கல்லூரிக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:17:22 PM (IST)

உலக புகைப்பட தினம்: நெல்லை புகைப்படக் கலை சங்கத்தினர் ரத்ததானம்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:41:48 PM (IST)

ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர் கைது: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:28:19 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி: ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 8:42:51 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயிலில் சுவாமி மாலையைத் தன் கழுத்தில் அணிந்த பூசாரி சஸ்பெண்ட்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 12:15:13 PM (IST)


