» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி - நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 3:48:52 PM (IST)

பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தூத்துக்குடியில் இருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூருக்குச் சென்னை எழும்பூர் வழியாகச் சிறப்பு ரயில்கள் செப்டம்பரில் இயக்கப்படவுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி - நரசப்பூர் (வண்டி எண்: 06019): தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாள் நள்ளிரவு 12.20 மணிக்கு நரசப்பூரைச் சென்றடையும்.
நரசப்பூர் - தூத்துக்குடி (வண்டி எண்: 06020): மறுமார்க்கத்தில், நரசப்பூரில் இருந்து செப்டம்பர் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) காலை 4.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.
மொத்தம் 18 பெட்டிகளைக் கொண்ட இந்தச் சிறப்பு ரயில் தமிழகத்தில் மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்:
இச்சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஆகஸ்ட் 22, சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல் தொடங்குகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)



BabuAug 22, 2026 - 06:26:37 PM | Posted IP 104.2*****