» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கடைகளில் குழந்தைகள் வேலை செய்தால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:51:09 PM (IST)

கடைகள், வணிக நிறுவனங்களில் பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவ, மாணவிகள் யாரேனும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டால் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தொழிலாளர் நலத்துறை (அமலாக்கம்) சார்பில் மாவட்டக் குழந்தைகள் தொழிலாளர் தடுப்புப் படை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.
குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை மீட்கும் பொருட்டுத் தொழிலாளர் துறையினரும், மாவட்டக் குழந்தைகள் தொழிலாளர் தடுப்புப் படையினரும் இணைந்து மேற்கொண்ட சிறப்பாய்வுகள் மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகள் விவரங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கடைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்களில் பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவ, மாணவிகள் யாரேனும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டால் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் சென்று கல்வியைத் தொடரத் தேவையான வழிகாட்டுதல்களைச் செய்ய வேண்டும் என்றும் அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவசுந்தரி மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)



SivasriAug 22, 2026 - 06:55:35 PM | Posted IP 104.2*****