» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் நடைமுறை ரத்து : தமிழக அரசு அறிவிப்பு
சனி 9, ஜூலை 2022 12:17:47 PM (IST)
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்ச்சி பெற்றி மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் நடைமுறை இந்த ஆண்டு முதல் கைவிடப்படுகிறது.


இந்நிலையில் முதல்-அமைச்சரின் செயலாளர் III அவர்களால் 6.6.2022 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்ட முடிவில் தெரிவிக்கப்பட்டபடி நிகழ்நிலையாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை தரும் மனுதாரர்களுக்கு பதிவுகள் மேற்கொண்டு பதிவு அட்டை வழங்கப்பட வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaippu.gov.in-ல் நிகழ்நிலையாக அனைவரும் பதிவுகள் மேற்கொள்ளும் வசதி உள்ளதால் அதில் நேரடியாக மாணவர்கள் பதிவுகள் செய்து கொள்ளலாம் என்பதையும் வேலைவாய்ப்பு பதிவுகள், கூடுதல் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை "இ-சேவை" வாயிலாக செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்பதால் அவ்வசதியினையும் விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விவரங்களை அனைவரும் அறியச்செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐ.டி நிறுவன அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை, பணம் கொள்ளை : நேபாள தம்பதி கைது
புதன் 21, மே 2025 10:32:04 AM (IST)

சூரிய ஒளி மின்சார திட்டம் அமைக்க மத்திய அரசு மானியம் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 20, மே 2025 5:46:45 PM (IST)

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.2.62 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
செவ்வாய் 20, மே 2025 4:19:46 PM (IST)

மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் : அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
செவ்வாய் 20, மே 2025 3:37:24 PM (IST)

அமைச்சு பணியாளர்களின் பணி நேரம் மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
செவ்வாய் 20, மே 2025 12:22:43 PM (IST)

மதுரையில் கனமழையால் சுவர் இடிந்து விபத்து: சிறுவன் உள்பட 3 பேர் பலி
செவ்வாய் 20, மே 2025 11:55:53 AM (IST)
