» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கோவில் வாசலுக்கு 2 புதிய சுற்று பஸ்கள் இயக்கம்!

சனி 10, மே 2025 8:40:22 AM (IST)



திருச்செந்தூர் பஸ்நிலையத்தில் இருந்து கோவில் வாசலுக்கு 2 புதிய சுற்றுப் பஸ்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், நகரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் விதமாகவும் கோவில் வாசலுக்கு அரசுப்போக்குவரத்து கழகம் சார்பில் தனியாக 3 சுற்றுப் பஸ்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. மகளிர் கட்டணமில்லா விடியல் பஸ்களைக இயக்கப்படும் இந்த சுற்றுப்பஸ்ஸில் ஆண்கள் மட்டும் ரூ.10 கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். 

இந்த நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் 2 புதிய சுற்றுப்பஸ்கள் இயக்க தொடக்க விழா நேற்று திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் நடந்தது. விழாவிற்கு, திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய பஸ்கள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழக கோட்ட பொதுமேலாளர் சரவணன், திருச்செந்தூர் கிளை மேலாளர் ராஜசேகர், நகராட்சி துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், தி.மு.க. வர்த்தக அணி மாநில இணை செயலாளர் உமரிசங்கர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் சுடலை, நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory