» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவட்டார் பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:58:27 AM (IST)



திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞரின் கனவு இல்லம் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

அதனடிப்படையில் ஊரகப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் எனவும், அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்து, இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.3.10 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட ஆலம்பாரி மலைவாழ் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

தற்போது பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது. கட்டப்பட்டு வரும் வீட்டின் அடிப்படை வசதிகள், கட்டுமான பணிகளின் தரம் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொண்டதோடு, கட்டுமான பணிகள் தொய்வின்றி நடைபெற பயனாளிக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பணிகளை தரமானதாகவும், உறுதித்தன்மையுடன் அமைத்திடுவதை துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். ஆய்வில் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory