» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சர் துரைமுருகனை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்!

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 5:26:51 PM (IST)



சென்னையில் லேசான காயம் அடைந்து ஓய்வெடுத்து வரும் அமைச்சர் துரைமுருகனை முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். 

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்த அமைச்சர் துரைமுருகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அமைச்சர் துரைமுருகனுக்கு தோல்பட்டை எலும்பில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டுள்ளதால் கையில் கட்டு போடப்பட்டுள்ளது. மேலும் மூன்று நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், வீட்டில் ஓய்வெடுத்து வரும் அமைச்சர் துரைமுருகனை முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் மருத்துவர்கள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். முதல்-அமைச்சருடன் அமைச்சர் எ.வ.வேலு உடனிருந்தார். தற்போது அமைச்சர் துரைமுருகன் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory