» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆதாரை ஏற்காதது ஏன்? - தலைமை தேர்தல் ஆணையருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 4:39:42 PM (IST)

தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பினை தொடர்ந்து, அது தொடர்பாக 7 கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இண்டியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு. பின்வரும் கேள்விகள் எழுகின்றன:

1. வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?

2. புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?

3. Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பிஹார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?

4. பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?

5. 01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?

6. வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?

7. "நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?’ எனத் தெரிவித்துள்ளார்.

பிஹாரில் வெளி​யிடப்​பட்ட வரைவு வாக்​காளர் பட்​டியலில், 65 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. இதற்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்​தன. தேர்​தல் ஆணை​யம், ஆளும் பாஜக.,வுடன் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டு சதி செய்​வ​தாக மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி பகிரங்​க​மாக குற்​றம் சாட்டி​னார்.

இந்​நிலை​யில் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் டெல்​லி​யில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதிரி​களும் இல்​லை, ஆதரவாளர்களும் இல்​லை. எங்​களுக்கு அனைத்து அரசி​யல் கட்​சிகளும் சரி சமம்​தான். பிஹாரில் வெளிப்​படை​யான முறை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தம் மேற்கொள்ளப்​பட்டு வரைவு வாக்​காளர் பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டது.

எனவே, வாக்கு திருட்டு போன்ற வார்த்​தைகளை பயன்​படுத்தி மக்​களை தவறாக வழிநடத்​து​வது அரசி​யல்​ சாசன சட்​டத்தை அவம​திக்​கும் செயல். வாக்கு திருட்​டு, இரட்டை ஓட்டு போன்ற குற்​றச்​சாட்​டு​கள் எல்​லாம் ஆதா​ரமற்​றவை” என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory