» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உணவகங்களுக்கு வெளியே சமையல் அடுப்புகள் வைக்க தடை: மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

திங்கள் 29, ஜூன் 2026 11:57:02 AM (IST)



உணவகங்கள், தங்களது சமையல் அடுப்புகளை கடையின் உட்புறத்தில் மட்டுமே வைத்துப் பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர்  ஐஷ்வர்யா உத்தரவிட்டார்.

நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் சில உணவகங்கள், தங்களது சமையல் அடுப்புகளைக் கடைக்கு வெளியே வைத்துப் பயன்படுத்துவதால் சாலையோரங்களில் செல்லும் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறு ஏற்படுவதாக மாநகராட்சி ஆணையர் இரா. ஐஷ்வர்யாவுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்தப் புகார்களைத் தொடர்ந்து, நேற்று பார்வதிபுரம் பகுதியில் மாநகராட்சி ஆணையர் இரா. ஐஷ்வர்யா நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவகங்களுக்கு வெளியே பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த சமையல் அடுப்புகளை உடனடியாக அகற்றி, கடையின் உட்புறத்தில் மட்டுமே வைத்துப் பயன்படுத்த வேண்டும் என்று உணவக உரிமையாளர்களுக்கு அவர் அதிரடி உத்தரவிட்டார்.

மேலும், நாகர்கோவில் மாநகரப் பகுதி முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களும் தங்களது சமையல் கூடங்களைக் கடையின் உட்புறத்திற்கு உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது சட்டப்படி கடுமையான உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களுக்கு இது போன்ற இடையூறுகள் ஏதேனும் ஏற்பட்டால், அதனை உடனடியாக மாநகராட்சிக்குத் தெரியப்படுத்தும் வகையில் 9487038984 என்ற பிரத்யேகப் புலன (WhatsApp) புகார் எண்ணையும் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory