» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நள்ளிரவில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!
திங்கள் 29, ஜூன் 2026 4:26:44 PM (IST)
தூத்துக்குடியில் நள்ளிரவில் கார் மற்றும் சரக்கு வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (46). இவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் தனது கார் மற்றும் டாடா ஏஸ் வாகனங்களை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அந்த வழியே குடிபோதையில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், முத்துக்குமாரின் கார் மற்றும் குட்டியானை வாகனத்தின் கண்ணாடிகளை திடீரென அடித்து உடைத்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பியோடினர்.
வாகனங்கள் உடைக்கப்படும் சத்தம் கேட்டு வெளியே வருவதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம், ஊழலற்ற நிர்வாகம்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் அறிவுறுத்தல்!
திங்கள் 29, ஜூன் 2026 5:06:27 PM (IST)

மின்வாரிய பணியிட நியமனங்களில் குளறுபடி: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
திங்கள் 29, ஜூன் 2026 4:47:49 PM (IST)

தூத்துக்குடியில் சூறாவளிக் காற்றுக்கு அரசமரம் சாய்ந்தது: பொதுமக்கள் உயிர் தப்பினர்!
திங்கள் 29, ஜூன் 2026 3:12:41 PM (IST)

தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: திமுகவினர் தயாராக இருக்க ஸ்டாலின் அழைப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 12:06:34 PM (IST)

உணவகங்களுக்கு வெளியே சமையல் அடுப்புகள் வைக்க தடை: மாநகராட்சி ஆணையர் உத்தரவு!
திங்கள் 29, ஜூன் 2026 11:57:02 AM (IST)

அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி: கரூர் எம்எல்ஏ பதவியை செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்!
திங்கள் 29, ஜூன் 2026 11:30:20 AM (IST)


