» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: திமுகவினர் தயாராக இருக்க ஸ்டாலின் அழைப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 12:06:34 PM (IST)

தமிழகத்தில் தற்போதைய புதிய அரசு பெரும்பான்மை இன்றித் தள்ளாட்டத்தில் இயங்கி வருவதால், எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்றும், அதற்கு திமுகவினர் 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் மதுரவாயல் முன்னாள் எம்எல்ஏவுமான பென்ஜமின் ஏற்பாட்டில் நேற்று மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் பென்ஜமின் உட்பட 5,000-க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக பவள விழா கண்ட ஒரு பேரியக்கம். எம்.ஜி.ஆர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுத்தான் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினரானார். தனிக்கட்சி தொடங்கிய பிறகும், கலைஞர் கருணாநிதி மீது தனக்கு இருந்த மரியாதையைச் சட்டமன்றத்தில் அவர் நிலைநாட்டியுள்ளார். அந்த அதிமுகவில் உண்மையாக உழைத்து, மாநகராட்சித் துணை மேயராக, ஊரகத் தொழில்துறை அமைச்சராகப் புள்ளிவிவரங்களுடன் திறம்படச் செயல்பட்ட பென்ஜமின் தற்போது கொள்கைக்காகத் திமுகவில் இணைந்துள்ளார்.
பொதுவாகத் தேர்தல் முடிந்தவுடன் ஆளுங்கட்சியை நோக்கித்தான் பலரும் செல்வார்கள். ஆனால், நீங்கள் கொள்கை உணர்வோடு எதிர்க்கட்சியான திமுகவில் இணைந்துள்ளீர்கள். கடந்த 5 ஆண்டு காலத் திமுக ஆட்சியில், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தினோம். உலகளாவிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கின.
ஆனால், ஆட்சி மாற்றம் நிகழ்ந்த ஒரே மாதத்திற்குள் தமிழ்நாடு அதலபாதாளத்திற்குப் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் நடமாட்டம் எனப் பல்வேறு பிரச்சினைகளால் தமிழகம் சீரழிந்து வருகிறது. இக்குற்றங்களில் ஆளுங்கட்சியினரே சம்பந்தப்பட்டிருப்பது வேதனைக்குரியது. மக்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள அவலங்களை உணர்ந்து, ஆளுங்கட்சி அமைச்சர்களை வழிமறித்துக் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.
திமுகவுக்கு வெற்றிகளும் தோல்விகளும் புதியவை அல்ல. தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பெரும்பான்மையுடன் அமையவில்லை. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆளுங்கட்சி 108 இடங்களை மட்டுமே பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்தான் வண்டியை ஓட்டி வருகிறது. எனவே, தமிழகத்தில் 3 மாதங்களிலோ அல்லது 6 மாதங்களிலோ எப்போது வேண்டுமானாலும் சட்டமன்றத் தேர்தல் வரலாம். நாம் அதற்கு 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும். கழகத்தின் வெற்றிக்கு இந்த நிமிடத்திலிருந்தே உழைக்கத் தொடங்குங்கள் என்று அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்வாரிய பணியிட நியமனங்களில் குளறுபடி: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
திங்கள் 29, ஜூன் 2026 4:47:49 PM (IST)

நள்ளிரவில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!
திங்கள் 29, ஜூன் 2026 4:26:44 PM (IST)

தூத்துக்குடியில் சூறாவளிக் காற்றுக்கு அரசமரம் சாய்ந்தது: பொதுமக்கள் உயிர் தப்பினர்!
திங்கள் 29, ஜூன் 2026 3:12:41 PM (IST)

உணவகங்களுக்கு வெளியே சமையல் அடுப்புகள் வைக்க தடை: மாநகராட்சி ஆணையர் உத்தரவு!
திங்கள் 29, ஜூன் 2026 11:57:02 AM (IST)

அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி: கரூர் எம்எல்ஏ பதவியை செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்!
திங்கள் 29, ஜூன் 2026 11:30:20 AM (IST)

திமுக தோற்கவில்லை, வெற்றி வாய்ப்பைத்தான் இழந்தது - 'ஜென்-சி' கலந்துரையாடலில் கீதாஜீவன் பேச்சு!
திங்கள் 29, ஜூன் 2026 10:38:12 AM (IST)


