» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தனியார் மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு வெட்டு: வாலிபர் தற்கொலை முயற்சி!
சனி 18, ஜூலை 2026 8:39:59 AM (IST)
நாசரேத் பகுதியில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து பெண் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு, வாலிபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள தேமாங்குளம் கோவில் தெருவைச் சேர்ந்த சாமுவேல் மகன் நாராயணன் (28). கூலி தொழிலாளியான இவரும், நாசரேத் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்குப் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அப் பெண் நாராயணனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.
பணிக்குச் சென்ற அப் பெண்ணிடம் நாராயணன் மீண்டும் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த நாராயணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அப் பெண்ணின் கைகள் மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியுள்ளார். பின்னர் நாராயணன் தனக்குத் தானே அரிவாளால் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நாசரேத் காவல் துறையினர், காயமடைந்த பெண்ணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த நாராயணன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காவல் துறைப் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து நாசரேத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காளியம்மன் கோயில் கொடை விழா மாட்டு வண்டி பந்தயம் : 52 ஜோடி மாடுகள் பங்கேற்பு!
சனி 18, ஜூலை 2026 12:11:57 PM (IST)

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 18, ஜூலை 2026 11:39:35 AM (IST)

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஞானசவுந்தரி த.வெ.க-விலிருந்து நீக்கம்!
சனி 18, ஜூலை 2026 11:29:22 AM (IST)

தமிழக வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.82 லட்சம் பறிமுதல்
சனி 18, ஜூலை 2026 10:42:22 AM (IST)

இ.பி.எஸ்., தலைமையிலான அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது: எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு!
சனி 18, ஜூலை 2026 10:20:15 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாதப் பிறப்பு தீர்த்தவாரி: சிறப்பு அபிஷேகங்கள்!
சனி 18, ஜூலை 2026 8:52:19 AM (IST)


