» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நெதர்லாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்!
திங்கள் 25, நவம்பர் 2024 11:04:55 AM (IST)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இத்தாலி அணி 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆண்கள் அணிகளுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இத்தாலி - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் , இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-4, 6-2 என்ற செட்களில் நெதர்லாந்தின் வான் டெ ஜாண்ட்ஷுல்பினை வீழ்த்தினார். இவர் காலிறுதியில் ரபேல் நடாலை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான ஜன்னிக் சின்னெர் நெதர்லாந்தின் டாலோன் கிரீஸ்பூக்கரை 7-6(2), 6-2 என்ற செட்களில் தோற்கடித்தார். இதன் மூலம் இத்தாலி அணி 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கடந்த 104 ஆண்டுகளாக முயன்று வரும் நெதர்லாந்து இந்தக் கட்டத்துக்கு வந்தது இதுவே முதல் முறையாகும். கடந்த 11 ஆண்டுகளில் இத்தாலி அடுத்தடுத்து டேவிஸ் கோப்பையை வென்ற முதல் அணியாக உருவெடுத்துள்ளது. இதுவரை மொத்தம் 3 முறை (1976, 2023, 2024) இத்தாலி அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மகளிர் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை போட்டியில் இத்தாலி சாம்பியனாகியிருந்ததும் நினைவு கூரத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

5 பந்தில் 5 விக்கெட்: அயர்லாந்து வீரர் வரலாற்று சாதனை!!
வெள்ளி 11, ஜூலை 2025 11:48:55 AM (IST)

இங்கிலாந்தில் டி -20 வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்!!
வியாழன் 10, ஜூலை 2025 5:51:43 PM (IST)

இளையோர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
புதன் 9, ஜூலை 2025 3:55:33 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி : ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:51:24 PM (IST)

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!
திங்கள் 7, ஜூலை 2025 11:02:49 AM (IST)

ஆகாஷ் தீப் 6 விக்கெட் சாய்த்து அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா
திங்கள் 7, ஜூலை 2025 8:53:39 AM (IST)
