» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்பிரிக்க அணி முதலிடம்
செவ்வாய் 10, டிசம்பர் 2024 3:57:16 PM (IST)
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 63.33 சராசரி புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
இதன் மூலம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை நெருங்கி உள்ளது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணி தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். மாறாக 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துள்ள இந்திய அணி, மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளுக்காக காத்திருக்காமல் இருக்க வேண்டுமானால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் 2 வெற்றியையும், ஒரு டிராவையும் பதிவு செய்ய வேண்டும். இது நிகழ்ந்தால் எந்தவித சிக்கலும் இன்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

5 பந்தில் 5 விக்கெட்: அயர்லாந்து வீரர் வரலாற்று சாதனை!!
வெள்ளி 11, ஜூலை 2025 11:48:55 AM (IST)

இங்கிலாந்தில் டி -20 வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்!!
வியாழன் 10, ஜூலை 2025 5:51:43 PM (IST)

இளையோர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
புதன் 9, ஜூலை 2025 3:55:33 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி : ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:51:24 PM (IST)

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!
திங்கள் 7, ஜூலை 2025 11:02:49 AM (IST)

ஆகாஷ் தீப் 6 விக்கெட் சாய்த்து அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா
திங்கள் 7, ஜூலை 2025 8:53:39 AM (IST)
