» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அம்பானி குடும்பத்தின் சொத்துமதிப்பு இந்தியாவின் 10% ஜிடிபி-க்கு சமம்!

சனி 10, ஆகஸ்ட் 2024 4:13:58 PM (IST)



முகேஷ் அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கிட்டத்தட்ட 10% விஞ்சி (₹25.75 லட்சம் கோடி) மதிப்பீட்டை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவின் பணக்கார வணிக குடும்பங்களின் சொத்துமதிப்பை பட்டியலிட்டு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.25.75 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் அம்பானியின் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது. புனேவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்தை இயக்கி வரும் பஜாஜ் குடும்பம், ரூ.7.13 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் அம்பானி குடும்பத்துக்கு அடுத்த பெரிய வணிக குடும்பமாக உருவெடுத்துள்ளது.

குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ₹5.39 லட்சம் கோடி மதிப்பீட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த மூன்று குடும்பங்களின் மொத்த மதிப்பான ரூ.38.27 லட்சம் கோடி என்பது சிங்கப்பூரில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகும் என்ற மலைக்கவைக்கும் உண்மையும் தெரியவந்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory