» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புஷ்பா 2 சம்பவம் எதிரொலி: சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என அரசு அறிவிப்பு!
சனி 7, டிசம்பர் 2024 11:53:48 AM (IST)
புஷ்பா 2 படம் பார்க்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, இனிமேல் எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று தெலுங்கானா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் 'புஷ்பா 2' திரைப்படம் நேற்று முன்தினம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.250 கோடி வசூலை அள்ளியது. இந்தியாவில் மட்டும் ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.
'புஷ்பா 2' படத்துக்கு தெலுங்கானா அரசு அனுமதி பெற்று திரையிடப்பட்ட அதிகாலை சிறப்பு காட்சியை காண ஆயிரக்கணக்கானோர் தியேட்டர்களில் திரண்டனர். அப்போது சிறப்பு காட்சியை காண ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டநெரிசலில் சிக்கி பெண் ரசிகை உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்ததாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இனிமேல் எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று தெலுங்கானா அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுபோல் அதிகாலை காட்சிகளுக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்து உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர் எம்.ஜி.ஆர் : தவெக தலைவர் விஜய் புகழாரம்
சனி 17, ஜனவரி 2026 11:36:21 AM (IST)

தமிழக வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர்., ஆற்றிய பங்கு சிறப்பானது : பிரதமர் மோடி புகழாரம்!
சனி 17, ஜனவரி 2026 11:18:17 AM (IST)

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி: மும்பை, புனே, நாக்பூர் மாநகராட்சிகள் பாஜக வசம்!
சனி 17, ஜனவரி 2026 10:13:06 AM (IST)

இந்தியா தனது எதிர்காலத்தை ஸ்டார்ட்-அப் புரட்சியில் காண்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 17, ஜனவரி 2026 8:41:49 AM (IST)

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி!
சனி 17, ஜனவரி 2026 8:34:16 AM (IST)

