» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து மகள் கவிதாவை நீக்கிய சந்திரசேகர் ராவ்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:02:50 PM (IST)

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் கே. கவிதாவை இடைநீக்ககுவதாக அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
தெலங்கானாவின் முன்னாள் அமைச்சரும் பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஹரிஷ் ராவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை கவிதா முன்வைத்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், கடந்த பிஆர்எஸ் ஆட்சியில் காலேஸ்வரம் திட்டத்தில் செய்யப்பட்ட முறைகேடுகள் தொடர்பான புகார் குறித்த விசாரணையை சிபிஐ-யிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தது.
இந்த நிலையில், பிஆர்எஸ் ஆட்சியில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவ், முறைகேடுகள் செய்து சொத்துகளை குவித்து, தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் சேர்ந்து சந்திரசேகர் ராவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கே. கவிதா திங்கள்கிழமை குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பிஆர்எஸ் மூத்த நிர்வாகியுமான சந்தோஷ் குமாரும் தனது தந்தைக்கு எதிராக செயல்படுவதாக கவிதா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கே. கவிதாவின் நடவடிக்கைகள் கட்சிக்கு விரோதமாகவும் சேதத்தை விளைவிக்கும் வகையிலும் இருப்பதால் அவரை உடனடியாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசிரியர்களுக்கு டெட் தகுதி தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:53:18 AM (IST)

செப்டம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 8:30:06 PM (IST)

வீடுகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை: வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:24:32 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: பாலம் இடிந்து சேதம் - வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:58:04 PM (IST)

நாங்கள் புதிய சந்தைகளைக் கைப்பற்றுவோம்: அமெரிக்காவுக்கு பியூஷ் கோயல் பதிலடி!
சனி 30, ஆகஸ்ட் 2025 4:19:31 PM (IST)

பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை நிதியுதவி: பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு
சனி 30, ஆகஸ்ட் 2025 12:10:49 PM (IST)
