» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!

வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

ஆந்திர மாநிலம் ஏலூரில் விஜய்வாடா - திருப்பதி சாலையில் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். மேலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 7 பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சிலக்கலூரி பேட்டை மாவட்டம் ஏலூருவைச் சேர்ந்த 15 பேர், பாபட்லா மாவட்டம் கொண்டமஞ்சலூரில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு ஆட்டோவில் சென்றுள்ளனர். பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு, இன்று அதிகாலை மீண்டும் ஆட்டோவில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, விஜய்வாடா - திருப்பதி சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பஸ், எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலும் நொறுங்கியது. ஆட்டோவில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 குழந்தைகள் உட்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் மற்றும் சிலக்கலூரிப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குண்டூர் அரசு மருத்துவமனையில் 2 பேரும், சிலக்கலூரிப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory