» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நான் இல்லையென்றால் சிறையில் இருந்திருப்பீர்கள்! – நெதன்யாகுவை எச்சரித்த டொனால்ட் டிரம்ப்!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:01:57 AM (IST)

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்ததாக 'ஆக்சியோஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் பேரில் வாஷிங்டனில் வைத்து இஸ்ரேலுக்கும், லெபனான் அரசுக்கும் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் எட்டப்பட்டது. இருப்பினும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தன. இதன் காரணமாக, அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக ஈரான் திங்கள்கிழமை அதிரடியாக அறிவித்தது.
ஈரானின் இந்த முடிவைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை திங்கள்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இந்த உரையாடலின்போது டிரம்ப் மிகவும் கோபமாகப் பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஆக்சியோஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
நெதன்யாகுவிடம் டிரம்ப் பேசுகையில்: "நீங்கள் ஒரு பைத்தியம். நான் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் நீங்கள் சிறையில் இருந்திருப்பீர்கள்; நான் தான் உங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது உலக நாடுகள் அனைத்தும் உங்களை வெறுக்கின்றன. உங்களின் இந்தச் செயல்களால் ஒட்டுமொத்த இஸ்ரேலையுமே அனைவரும் வெறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது" என்று மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.
டிரம்ப்பின் எக்ஸ் (X) தளப் பதிவு: இந்தக் காரசாரமான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "அனைத்து விதமான துப்பாக்கிச் சூடு மற்றும் ராக்கெட் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்படும். இஸ்ரேல் இனி ஹிஸ்புல்லாவைத் தாக்காது; அவர்களும் இஸ்ரேலைத் தாக்க மாட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
நெதன்யாகுவின் விளக்கம்:
அதிபர் டிரம்ப்புடனான தொலைபேசி உரையாடலை உறுதிசெய்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள பதிவில்: "இஸ்ரேல் நகரங்கள் மற்றும் மக்கள் மீதான தாக்குதலை ஹிஸ்புல்லா அமைப்பு நிறுத்தத் தவறினால், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள பயங்கரவாத இலக்குகளை இஸ்ரேல் மீண்டும் மிகக் கடுமையாகத் தாக்கும் என்பதை டிரம்ப்பிடம் தெளிவுபடுத்தியுள்ளேன். எங்களின் இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. அதே சமயம், தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) திட்டமிட்டபடி தொடர்ந்து செயல்படும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)

இலங்கையில் தொடரும் சிறைக் கலவரங்கள்: கைதிகள் மோதலில் 3 பேர் பலி; 23 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:18:26 PM (IST)

தாய்லாந்து பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு: ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:33:44 PM (IST)

95 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறை: பிரிட்டன் பூங்காவில் உலக சாதனை படைத்த அரிய பறவை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:23:54 PM (IST)

நிலவில் மோதியது 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் பாகம்: பூமிக்கு ஆபத்தா? நாசா விளக்கம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:56:22 PM (IST)


