» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கள்ளக்காதலை கண்டித்ததால் தாய்-மகன் கொலை: 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
வியாழன் 5, செப்டம்பர் 2024 8:43:38 AM (IST)
கள்ளக்காதலை கண்டித்ததால் தாய்-மகனை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள குறிச்சிக்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (45), விவசாயி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி இரவு தனது வீட்டின் பின்னால் வைத்திருந்த வைக்கோல் படப்பில் மாட்டுக்கு வைக்கோல் எடுக்கச் சென்றார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சிராஜ் என்ற சிராஜூதீன் (41) என்பவர் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். இதைக்கண்ட சுப்பிரமணி கள்ளக்காதல் ஜோடியை கண்டித்து எச்சரித்து அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணி தனது மனைவியிடமும், ஊரில் சிலரிடமும் கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிராஜ், குறிச்சிக்குளத்தை சேர்ந்த தனது நண்பர்களான லத்திப் மற்றும் நாகூர் மீரான் (42) ஆகியோரிடம் கூறினார்.
அவர்கள் சுப்பிரமணியை கொலை செய்ய திட்டம் தீட்டினர். கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி குறிச்சிக்குளம் ஊருக்கு கிழக்கே உள்ள ஆலமரம் அருகில் சுப்பிரமணி தனது தாய் கோமதி அம்மாளுடன் (65) வயலில் இருந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அவர்களை சிராஜ், லத்தீப், நாகூர் மீரான் ஆகிய 3 பேரும் வழிமறித்தனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுப்பிரமணியை வெட்டிக் கொலை செய்தனர். இதை தடுக்க வந்த கோமதி அம்மாளை கம்பால் தாக்கினர்.
இதில் உயிருக்கு போராடிய அவர் ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மானூர் போலீசார் சிராஜ், லத்திப், நாகூர் மீரான் மற்றும் சிராஜின் கள்ளக்காதலி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை 1-வது மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் போது லத்தீப் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், குற்றம்சாட்டப்பட்ட சிராஜ், நாகூர் மீரான் ஆகியோர் சுப்பிரமணியை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், கோமதி அம்மாளை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த இரட்டை ஆயுள் தண்டனையை 2 பேரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
