» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய முத்துக்கிளி நாவல் வெளியீடு!
திங்கள் 30, செப்டம்பர் 2024 5:27:41 PM (IST)

வள்ளியூர் தெற்கு கள்ளிகுளம் டி.டி.எம்.என்.எஸ். கல்லூரியில், முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி முத்துக்கிளி நாவலை கல்லூரி செயலாளர் வெளியிட்டார்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சான்றோர் மலரில் எழுதிய முத்துக்கிளி நாவல் யாவரும் பதிப்பகத்தின்மூலம் வெளிவந்தது. இந்த நூலை தெ. கள்ளிகுளம் டி.டி.எம்.என்.எஸ் கல்லூரியில் வைத்து கல்லூரி செயலாளர் ராமநாதன் வெளியிட, கல்லூரி முதல்வர் மேஜர் ராஜன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கல்லூரியின் கண்காணிப்பாளர் பாலசந்திரன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நாட்டார்குளம் எஸ்.கே. திருப்பதி, ஹரிதாமேதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முத்துக்கிளி தொடர் சான்றோர் மலரில் கடந்த 7 வருடகாலமாக வெளிவந்தது. இதன் முதல் பாகம் முத்துக்கிளி என்ற பெயரில் யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நாவல் புதுமை பித்தன் 2022 நாவல் போட்டியில் 80 நாவல்களில் , சிறந்த 8 நாவல்களில் ஒரு நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இறுதிபோட்டியில் முதல் பரிசு பெற்ற வா.மு.கோமு எழுதிய கிடாவெட்டு நாவலுடன் போட்டிபோட்டு இரண்டாம் இடத்தினை பெற்றது. இந்த நாவலில் நெல்லை வட்டாரத் தமிழில் இரு வேறுபட்ட காலகட்டத்தின் கதைகளைக் காட்டியிருக்கிறார் நாவலாசிரியர் முதாலங்குறிச்சி காமராசு.
தாமிரபரணி, சித்தர்கள், ஜமீன்தர்கள் என வரலாறுகளை எழுதி வந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவின் இந்நாவலில் பாசத்திற்கு ஏங்கும் ஓர் அபலைப் பெண்ணை அபகரித்துச் செல்லும் தம்பதிகளும் அரவாணிகள் மற்றவர்களுக்கா வாழ்பவர்கள் என்ற வாழ்வியலையும் செல்போனால் தொலைந்து போன முத்துக்கிளியும், ஒரு காலத்தில் தொலை தொடர்பு அற்ற காலத்தில் தீ விபத்தால் மரித்துப்போன முத்துக்கிளி என இரண்டு முத்துக்கிளிகளும் . 21 வயதில் சொல்ல முடியாத காதலை 65 வயதில் சொல்லி விட்டு இழந்ததை மீட்க முடியாமல் ஏங்கும் முதிர் காதலர்களும் இந்த நாவலில் இருக்கிறார்கள்.
இரண்டாம் பாகம் தீதும் நன்றே என்ற தலைப்பில் சுவடு பதிப்பகம்வெளியிட்டுள்ளது. மூன்றாவது பாகம் ரங்கூன் ராஜத்துரை என்ற தலைப்பிலும் , நான்காம் பாகம் மலராத மொட்டுகள் என்ற தலைப்பிலும் விரைவில் வர உள்ளது. முத்துக்கிளி பெற விரும்புவோம் விலை 280/-& யாவரும் பதிப்பகம் 9024261472தீதும் நன்றே பெற விரும்புவோர் விலை 330/& சுவடு பதிப்பகம் 9551065500, 9791916936 இரண்டு நூலும் சேர்ந்து வேண்டுவோர் 8760970002 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)
