» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்மண்டல சாரண சாரணிய இயக்க பெருந்திரளணி சாம்பவர் வடகரை அரசு பள்ளி முதலிடம்

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 8:11:20 PM (IST)



தென்மண்டல சாரண சாரணிய இயக்க பெருந்திரளணியில் தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி சாரணர்கள்  முதலிடம் பிடித்தனர்.

சாரண சாரணிய இயக்கம் தென்மண்டல பெருந்திரளணி திருநெல்வேலி மாவட்டம் மருதக்குளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் 21.08.2025 முதல் 23.08.2025 வரை நடைபெற்றது. இதில் 39 கல்வி மாவட்டத்தில் 700 சாரண சாரணியர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி சாரணர்கள், தலைமை ஆசிரியர் பா.பிரபாவதி வழிகாட்டுதலின்படி கூடாரம் அமைத்தல் போட்டியில் முதலிடமும் colour party இரண்டாம் இடமும் பெற்று மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்துள்ளார்கள். 

பெருந்திரளணியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் போட்டியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் கேடயம் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. சிவக்குமார் அய்யா அவர்களிடம் பெறும் நிகழ்வுகள். சாரண ஆசிரியர் மற்றும் மாவட்ட பயிற்சி ஆணையர் சி.நடராஜன் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து பல்வேறு போட்டிகளில் பங்கு பெறச் செய்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பள்ளி தலைமை ஆசிரியர் பா. பிராபாவதி அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு பாராட்டுக்களை தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory