» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சாக்லேட் தருவதாக கூறி சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ ட்டத்தில் வாலிபர் கைது!
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:28:55 AM (IST)
நெல்லையில் சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே உள்ள கீழப்பாட்டம் பகுதியை சேர்ந்தவர் விக்ரம் (22). இவர் சம்பவத்தன்று அந்தப்பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார்.பின்னர் அவர்களுக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து விக்ரம் அந்த சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் கதறினர். ஆத்திரமடைந்த விக்ரம், இதுபற்றி வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று சிறுவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சிறுவர்கள் இதுபற்றி பெற்றோரிடம் கூறாமல் மறைத்து வந்தனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து சமீபத்தில்தான் சிறுவர்கள் தங்களின் பெற்றோரிடம் கூறினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் தந்தை நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுவர்களுக்கு விக்ரம் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று போலீசார் விக்ரம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:52:09 AM (IST)

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
சனி 21, மார்ச் 2026 4:39:16 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சனி 21, மார்ச் 2026 12:44:36 PM (IST)

பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்ரல் 1-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 5:03:53 PM (IST)

அனுமதி பெறாத வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:27:46 PM (IST)

மின்சாரத்தைத் துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்களைத் திருடிச் சென்ற மர்ம கும்பல்: நெல்லையில் துணிகரம்!
வெள்ளி 20, மார்ச் 2026 8:34:32 AM (IST)

