» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏப். 26-ல் ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 10:32:22 AM (IST)



ராகு-கேது பெயர்ச்சி வரும் 26-ம் தேதி நிகழ உள்ளதாக திருநாகேஸ்வரம் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள நாகநாத சுவாமி ஆலயத்தில் ராகு பகவான் தனி சன்னதி கொண்டு மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். நவகிரக தலங்களில் இந்த தலம் ராகு பகவானுக்குரிய பரிகார தலமாகவும் விளங்குகிறது.

18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4:20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடப்பெயற்சி அடைகிறார். இதனை முன்னிட்டு ராகுக்காண பரிகாரத்தலமாக விளங்கும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் தனி சன்னதி கொண்டுள்ள மங்கள ராகுக்கு இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

எதிர்வரும் ராகு பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை இவ்வாலயத்தில் உள்ள ராகு பகவானுக்கு பல்வேறு மங்களப் பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிறப்புத் தீபாரதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த ராகு பெயர்ச்சியினால் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory