» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுனாமி குடியிருப்பு பகுதிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 12:40:19 PM (IST)

இராஜாக்கமங்கலம் சுனாமி குடியிருப்பு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்பட்ட இராஜாக்கமங்கலம் சுனாமி குடியிருப்பு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்குகென பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள்.
மேலும் சுனாமி பாதித்த இடங்களில், மறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், வீடு இழந்தவர்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் வீடுகளைக் கட்டிக் கொடுத்தல், பெரும்பான்மையாக பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு தேவையான படகுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. சுனாமி ஆழிப்பேரலையின் (Tsunami) பாதிப்புகளுக்கு பின்னர் மீனவர்களின் மறுவாழ்விற்காக சுனாமி குடியிருப்பு திட்டத்தின் இலவசவீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.
அதே நேரத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதிகளவில் தங்கள் நிதியில் இருந்து வீடுகள் கட்டி கொடுத்தார்கள். அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் இராஜாங்கமங்கலம் துறை சுனாமி குடியிருப்பு பகுதியில் 58 மீனவ மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த 2007-2008ம் ஆண்டு வீடுகள் கட்டி கொடுத்தார்கள். அங்குள்ள மீனவ மக்கள் பட்டா வேண்டியும், தங்கள் வீடுகளை புதுப்பித்து தரும்படியும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார்கள்.
அதன்படி அவர்களின் குடியிருப்பு பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கு வசிக்கும் மீனவ மக்களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டம், சுனாமி குடியிருப்பு திட்டம், சுனாமி குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டம், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு புதிய வீடுகளும், சீரமைப்பு தேவைப்படும் வீடுகளுக்கு சீரமைப்பு திட்டங்களின் கீழ் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, மீன்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் துணை இயக்குநர் மீன்வளத்துறை சின்னகுப்பன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (இராஜாக்கமங்கலம்), துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 3, மே 2025 4:33:08 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்
சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
