» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யூபிஎஸ்சி தேர்வில் முதலிடம்: முதல்வர் பெருமிதம்!

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 5:09:46 PM (IST)



யூபிஎஸ்சி தேர்வில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்ற சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். 

யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் ஆவார்.

இதுபற்றி சிவச்சந்திரன் கூறுகையில், "யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வில் வெற்றிபெற நான் முதல்வன் திட்டம் உதவிகரமாக இருந்தது" என்றார். அதேபோல், இந்திய அளவில் 39ஆம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 50 பேரில் 18 பேர் முழுநேர உறைவிட பயிற்சி மேற்கொண்டவர்கள் ஆவர். மேலும் தமிழில் தேர்வு எழுதிய காமராஜ், தங்கபாண்டியன் ஆகிய இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது! இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory