» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேலச்செவல் டி‌டி‌டிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)



நெல்லை மாவட்டம் மேலச் செவல் டி.டி.டி.ஏ. பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.

தென்னிந்திய திருச்சபை நெல்லைத் திருமண்டலத்தின் கீழ் இயங்கி வருகிற மேலச்செவல் டி.டி.டி.ஏ. உயர்நிலைப்பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்ட 3 புதிய வகுப்பறைகளின் திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் தலைமை தாங்கினார். மேலச்செவல் பேரூராட்சித் தலைவர் அன்னபூரணி ராஜன் முன்னிலை வகித்தார்‌.

விழாவிற்கு ஆரம்பமாக பள்ளித் தாளாளர் செல்வின் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் எம்.பி. கலந்து கொண்டு புதிய பள்ளிக் கட்டிடத்தைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நெல்லை திருமண்டல உயர்நிலைப் பள்ளிகளின் மேலாளர் சுதர்சன், தென்மேற்கு சபைமன்றத் தலைவர் குருவானவர் அருள்ராஜ் பிச்சைமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நெல்லை பேராயர் பர்னபாஸ் இறைஆசி வழங்கினார்.

விழாவில் முன்னாள் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன், வட்டாரத்தலைவர் ரூபன் தேவதாஸ், வைகுண்டதாஸ், அம்பை தொகுதி பொறுப்பாளர் ராம்சிங். நல்லூர் பால்ராஜ், கொங்கந்தான்பாறை ரிச்சர்டு ஜேம்ஸ் பீட்டர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிறைவாக தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் நன்றியுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory