» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

ஐஏஎஸ் தேர்வில் சாத்தான்குளம் அருகே உள்ள விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் காபிரியேல் மார்க் வெற்றி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் கிராமம் மேல பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கத்துரை, விஜயா தம்பதியினரின் மகன் பெலிக்ஸ் காபிரியேல் மார்க் (27). சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் பிரிவில் ஆட்டோ மொபைல் கடந்த 2019ஆம் ஆண்டு முடித்துள்ளார். அதன்பி¢ன் அவர் எதிர்பார்த்த பணி கிடைக்காமல் குறைந்த சம்பளம் உள்ள பணி கிடைக்க வாய்ப்பு வந்துள்ளது.
இதனால் விருப்பம் இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது தங்கத்துரை, ஐஏஎஸ் தேர்வு எழுத வலியுறுத்தினார். முதலில் அத்தேர்வு கடினம் என மறுத்து வந்த அவர் தந்தை விருப்பபடி ஐஏஎஸ் தேர்வு எழுதி தொடங்கினார். முதலில் 3முறை தேர்வு ஆகவில்லை. அதன்பின் தொடர்ந்து எழுதியதில் இரண்டு முறை நேர்காணல் வரை சென்று வந்துள்ளார். 6வது முறையாக இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதியதில் 783 இடம் பெற்று தேர்வு பெற்றுள்ளார்.
நேர்காணல் முடிந்த நிலையில் பணி ஒதுக்கீடுக்காக காத்திருக்கிறார். அவரது தந்தை தங்கதுரை விவசாயியாகவும், அவரது தாய் வீட்டிலும் இருந்து வருகிறார். மகன் பெலிக்ஸ் காபிரியேல் மார்க் ஐஏஎஸ் தேர்வில் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தனர். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பெலிக்ஸ் காபிரியேல் மார்க், தனது பெற்றோர், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாத்தான்குளத்தில் உள்ள ஹென்றி மெட்ரிக் மேல்நிலையில் 1முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தேன், அப்போது வட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன். அதன் சென்னை அண்ணா பல்கலைகழத்தில் பொறியியல் ஆட்டோ மொபைல் பிரிவு எடுத்து படித்தேன். எனது தந்தை தங்கதுரை, அவரது விருப்பமாக ஐஏஎஸ் தேர்வு எழுத தொடங்கினேன். வீட்டில் இருந்தே படித்து வந்தேன்.
எனது படிப்புக்கு பெற்றோர் முதல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினர். முதலில் முன்று முறை தோல்வியே ஏற்பட்டது. அதன்பின் தொடர்ந்து எழுதியதில் இரண்டு முறை நேர்காணல் வரை சென்று வந்துள்ளேன். பணியிடத்துக்கு தேர்வாகவில்லை. தற்போது எழுதிய தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் எனக்கு வாய்ப்பு அளித்த கடவுளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு உறுதுணையாக இருந்து எனது பெற்றோர், எனது தந்தையின் நணபர்கள் மற்றும் உறவினர், எனது நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சிறிய கிராமமான மேல பனைக்குளத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ளது எனக்கு பெருமை அளிக்கிறது. என்னை போல் கிராமபுற பகுதியில் பலர் இந்த தேர்வு எழுதி வெற்றி பெற்று பணிக்கு வர வேண்டும். எனக்கு எந்த பணி ஒதுக்கீனாலும் நேர்மையுடன் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்வேன் என்றார்.
மக்கள் கருத்து
Murugeson,Udayarvilai,ColachelApr 23, 2025 - 12:31:00 PM | Posted IP 172.7*****
Thank you brother,You are the inspiration of many rural students.Wishes….
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 3, மே 2025 4:33:08 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்
சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)

உண்மை விளம்பிApr 23, 2025 - 10:34:45 PM | Posted IP 104.2*****