» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதன் 23, ஏப்ரல் 2025 11:36:25 AM (IST)
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் பலியானதாக வந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஜம்முவில் மோசமான சூழ்நிலை நிலவுவதற்கு இது எடுத்துக்காட்டு.
தாக்குதலில் தமிழர்கள் சிலர் பாதிக்கப்பட்டதாக தகவல் வந்த உடனேயே அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய உத்தரவிட்டேன். காஷ்மீர் அரசுடன் இணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய ஜனநாயகத்தில் இடமில்லை.
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மாநிலம் திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். காஷ்மீருக்கு சென்று பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் அப்தாம் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதையடுத்து சட்டசபை உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 3, மே 2025 4:33:08 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்
சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
