» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெப்ப அலை கணக்கிடும் முறையில் மாற்றம் வேண்டும் : கனிமொழி எம்பி வலியுறுத்தல்!

புதன் 23, ஏப்ரல் 2025 12:34:40 PM (IST)

வெப்ப அலையைக் கணக்கிடும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், "காலநிலை மாற்றத்தின் பல்வகை தாக்கங்களைக் கணக்கில் கொண்டு வெப்ப அலையைக் கணக்கிடும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய புவி அறிவியல் அமைச்சத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறேன்‌.

வெப்பநிலையையும் தாண்டி, அதிகரித்து வரும் காற்றின் ஈரப்பதம்(Humidity) உள்ளிட்ட இதர காரணிகளையும் கருத்தில் கொண்டு வெப்ப அலையைத் தீர்மானிக்க வேண்டும் எனவும், இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory