» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திறமைகளை மேம்படுத்துவதே மாணவர்களின் தலையாய கடமை: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுரை

புதன் 23, ஏப்ரல் 2025 4:09:45 PM (IST)



"மாணவர்கள் தங்கள் திறமைகளை அறிந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே அவர்களது தலையாய கடமை" என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். 

தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் இன்று (23.04.2025), 2024-25ஆம் கல்வியாண்டில்  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற ‘கல்லூரிக் கனவு” நிகழ்ச்சியின் மூலம் மாணவ, மாணவியர்களை பல்வேறு கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று பார்வையிட வைத்து அவர்களது உயர்கல்வி குறித்து சந்தேகங்களைக் பேராசிரியர்களிடம் கேட்டறிந்து கொள்ளும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Exposure Visit - 2025-ல் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,  தலைமையேற்று, மாணவ, மாணவியர்களுடன் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற நோக்கில் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சியை தயார் செய்து  மாணாக்கர்கள் அனைவரும்  உயர் கல்வியில் எத்தகைய பிரிவை தேர்ந்தெடுப்பது, எந்த விதமான கல்லூரியில் எவ்விதமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது என்பவற்றை நேரிடையாக கண்டு, பிறகு தேர்வு முடிவுக்கு பின்பு குறைந்த பட்சம் ஒரு மாணவர் மூன்று இடங்களில் விண்ணப்பம் செய்யப்பட வேண்டும். எல்லா மாணவர்களும் உயர் கல்வியில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். பள்ளி வாழ்க்கையில் ஆசிரியர்கள் அனைத்தையுமே தங்கள் இருப்பிடங்களில் கிடைக்குமாறு உதவி செய்கின்றனர்.

கல்லூரி வாழ்க்கை என்பது பரந்த நிலப்பரப்பில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை கூறியும், அதற்கான வழிகளையும் கூறி சுயமாக மாணவர்களே தேர்ந்தெடுக்கும் ஒரு சுய நம்பிக்கையை வளர்ப்பது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் முக்கிய நோக்கம் ஆசிரியர்கள் வழிகாட்டியாக தான் இருப்பார்கள். மாணவர்கள் தங்கள் திறமைகளை அறிந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே மாணவரின் தலையாய கடமை ஆகும்.  கல்லூரி கனவு நிகழ்ச்சியில், நமது மாவட்டத்தில் உள்ள  அரசு கலை, பொறியியல், செவிலியர் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகள் அருகாமை மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரி, கால்நடை, மருத்துவம், பல்கலைக்கழகம் போன்ற 42 இடங்களுக்கும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளமையங்களில் இருந்தும்  மாணாக்கர்கள்  செல்கின்றார்கள்.

இந்நிகழ்வானது உயர்கல்விக்கான அடிப்படையினை திட்டமிடுதல் ஆகும். இதுவரை மாணவராகிய நீங்கள் பயன்படுத்திய களங்களும், தற்போது பார்வையிடக்கூடிய களங்களின் வேறுபாடையும் அறிந்து கொள்ளலாம். தங்களுக்கு தேவையானவை எவை என்பதையும் அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இந்நிகழ்வு அமையும். ஆலோசனைகளை அனைவரிடமும் பெற்றுக்கொண்டு சுயமாக முடிவெடுக்க ஒரு வழித்தடமாக இந்நிகழ்வு அமையும். மேலும், பள்ளிக் கல்வியே வாழ்க்கையின் பிரதானம் ஆகும். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லலாம் என்று நினைக்கும் மாணவர்கள் வாழ்வில் முன்னேறுவது சிரமமாக இருந்தது. 

தற்போது அரசு மாணாக்கர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்கள் உயர் கல்வியில் தங்களை இணைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. நமது மாவட்டத்தில் இந்நிகழ்வு 23.04.2025 முதல் 29.04.2025 வரை பயன்பெறும் வகையில் நடைபெறுகிறது. இதை பயன்படுத்தி அனைத்து மாணாக்கர்களும் வாழ்வில் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் (பயிற்சி)  சத்யா, கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory