» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புதன் 23, ஏப்ரல் 2025 4:18:04 PM (IST)
கோடை விடுமுறையையொட்டி மும்பை - கன்னியாகுமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்து வருகிறது. அந்தவகையில் மும்பையிலிருந்து கன்னியாகுமரிக்கு கோடை சிறப்பு ரயில் அறிவிப்பை தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ளது.
மே, ஜூன் மாதங்களில் வாரம்தோறும் புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு மும்பையிலிருந்து புறப்படும் ரயில் வியாழக்கிழமை பிற்பகல் 1..15 மணிக்கு கன்னியாகுமரியை அடைகிறது. அதேபோல வியாழக்கிழமை கன்னியாகுமரியிலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும் ரயில், சனிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மும்பையை அடைகிறது.
அதன்படி, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் மும்பையிலிருந்து குமரிக்கும் மே 8, 15, 22, 29, ஜூன் 5,12, 19, 26 ஆகிய தேதிகளில் குமரியிலிருந்து மும்பைக்கும் ரயில் இயக்கப்படுகிறது. இன்று(ஏப். 23) பிற்பகல் 2.15 மணிக்கு இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 3, மே 2025 4:33:08 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்
சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
