» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை : பொது இடங்களில் தீவிர கண்காணிப்பு

வியாழன் 24, ஏப்ரல் 2025 8:04:03 AM (IST)

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக தூத்துக்குடியில் கோவில், கிறிஸ்தவ ஆலயம், மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் கூடும் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், ரயில், பஸ் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும், இப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்ஹாம் மலைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுற்றுலா தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அவர்கள் தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில், வைகுண்டபதி பெருமாள் கோவில், பனிமயமாதா ஆலயம், ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். மேலும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory