» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேருந்து நிலையத்தில் கேரள நபரிடம் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல்: போலீசார் விசாரணை

வியாழன் 24, ஏப்ரல் 2025 4:48:59 PM (IST)

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கேரள நபரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.35 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று காலையில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சத்தியவன் என்ற நபர் கையில் பையுடன் இருந்துள்ளார். போலீசார் அவரை சோதனை செய்ததில், அவரது பையில் கட்டுக்கட்டாக ரூ.35 லட்சம் மதிப்பிலான பணம் இருந்துள்ளது.

அந்த பணம் குறித்து அவரிடம் கேட்டபோது, அதற்கான எந்த உரிய ஆவணமும் அவரிடம் இல்லை. இதையடுத்து அவரை காட்டூர் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு தகவல் அளித்து பறிமுதல் செய்த ரூ.35 லட்சத்தை ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory