» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போக்சோ வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

வெள்ளி 25, ஏப்ரல் 2025 11:17:30 AM (IST)

விருத்தாசலத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக ஜெயலட்சுமி உள்ளார். தலைமை காவலரான சிவசக்தி எழுத்தர் பணியை கவனித்து வந்தார். இந்த நிலையில், இவர்கள் இருவரும் பெண் வன்கொடுமையில் ஈடுபட்டவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அத்துறையை சேர்ந்த போலீசார் பெண் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, தலைமைக் காவலர் சிவசக்தி ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர். இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory