» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோணம் பட்டுவளர்ச்சி செயல்முறை பயிற்சி நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:48:20 PM (IST)

கன்னியாகுமரி பட்டு வளர்ச்சித்துறை சார்பில் கோணம் பட்டுவளர்ச்சி செயல்முறை பயிற்சி நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம், கோணம் பகுதியில் அமைந்துள்ள பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில் பட்டு வளர்ச்சி செயல்முறை பயிற்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பட்டு புழு, இளம் புழு வளர்ப்பு, பட்டுபுழு அங்காடி, மல்பெரி நாற்றுகள், மரமல்பெரி, பட்டுநூல், பட்டுக்கூடு மற்றும் அரசு பட்டு நூற்பு மையம், தொழில்நுட்ப சேவை மையம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டதோடு, மாவட்டத்திலிருந்து ஒரு மாதத்திற்கு 2000 கிலோ பட்டுக்கூடுகள் பெறப்பட்டு, அதிலிருந்து மாதத்திற்கு 200 முதல் 250 பட்டுநூல் உற்பத்தி செய்யப்பட்டு காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து இளம்புழு முட்டைகள் வாங்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு இளம் புழுக்களாக விநியோகிக்கப்பட்டு வருகிறது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மாநில திட்டத்தின் கீழ் பட்டுகூட்டிலிருந்து தாயரிக்கப்படும் கைவினைபொருட்களுக்கு ரூ.1.50 இலட்சம் மானியம் வழங்கியுள்ளார்கள். அதனடிப்படையில் அலங்கார பூக்கள், மாலை, கம்மல் உள்ளிட்ட பல்வேறு கைவினைப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வருடத்திற்கு 1.25 இலட்சம் மல்பெரி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் கோணம் பட்டுவளர்ச்சி அரசு செயல்முறை பயிற்சி நிலையத்தில் மல்பெரி நாற்றுக்களை நட்டார். ஆய்வில் பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் மீனா குமாரி, இளைநிலை ஆய்வாளர்கள் சித்ரா, உதயகுமார், சைமன் அருள் ஜீவராஜ், செல்லையா, துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 3, மே 2025 4:33:08 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்
சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
