» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதியவர்கள் சாலையை கடக்க உதவும் பெண் காவலர்கள் : பொதுமக்கள் பாராட்டு!

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:40:37 AM (IST)



குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் சாலையை கடக்க உதவி வரும் பெண் காவலர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வருகின்றவர்களில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலக எதிரே உள்ள சாலையை கடக்க பெரிதும் சிரமப்பட்டு கடந்து செல்கின்றனர்.

ஆட்சியர் அலுவலக வளாக முகப்பு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பெண் காவலர்கள் சாலையை கடக்க முடியாமல் இருக்கும் பெரியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் இன்று தனது பென்ஷன் பணத்திற்காக எழுதிக் கொடுக்க வந்த முதியவர் சாலையை கடக்க முடியாமல் திணறி நிற்பதை பார்த்த அப்பகுதியில் பணி புரிந்து கொண்டிருந்த ஊர் காவல் படையை சேர்ந்த பிரேமலதா பெரியவர் சாலையை கடக்க வாகனங்களை நிறுத்தி உதவி செய்தார். ஊர்க்காவல் படையை சேர்ந்த பிரேமலதாவின் செயலை அப்பகுதியில் உள்ளவர்கள் வெகுவாக பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory