» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காலனி என்ற சொல் பொது புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:58:01 AM (IST)

'காலனி' என்ற சொல் பொது புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: 'காலனி' என்ற சொல் வசைச்சொல்லாக மாறி இருக்கிறது. ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும். அரசு ஆவணங்களில் இருந்தும் நீக்கப்படும். 'காலனி' என்ற சொல்லை நீக்க வேண்டும் என வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஆதி குடிகளை இழிவுபடுத்தும் 'காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

JaadhiApr 29, 2025 - 02:29:51 PM | Posted IP 104.2*****

Eppodhu olikkappadum??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory