» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை!

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 4:49:57 PM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாள்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைக் கால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

அதன்படி, அவசர வழக்குகளை நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோர் மே 7, 8 தேதிகளில் விசாரிப்பார்கள் என்றும் மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் லட்சுமி நாராயணன், நிர்மல் குமார், சுவாமிநாதன் ஆகியோரும் மே 28, 29 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் சத்திய நாராயணா பிரசாத், செந்தில் குமார் ராமமூர்த்தி, திலகவதி ஆகியோரும் விசாரிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பாலாஜி, ஜோதிராமன், சக்திவேல், ராமகிருஷ்ணன், வேல் முருகன், பூர்ணிமா, ராஜசேகர், ஸ்ரீமதி, விஜயகுமார், வடமலை, ஷமீன் அகமதி, ஆனந்த் வெங்கடேஷ், தண்டபாணி ஆகியோர் விடுமுறைக் கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory