» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மழலையர் பள்ளியில் சிறுமி உயிரிழந்த சம்பவம் எதிரொலி: கோடைகால பயிற்சிக்கு தடை!

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:46:28 PM (IST)

மதுரை மாவட்டத்தில் பள்ளிகளில் அனுமதியின்றி கோடைக்கால பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் உள்ள பள்ளிகளில், பள்ளிக் கல்வித்துறை அனுமதின்றி எவ்வித கோடைக்கால பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, குழந்தை உயிரிழந்த பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தில் அனுமதியின்றி கோடைக்கால பயிற்சி வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவத்தில் பள்ளி தாளாளர் உள்பட 5பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் செய்து மதுரை அண்ணாநகர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன் என்பவரது நான்கு வயது மகள் ஆருத்ரா, மழலையர் பள்ளியில் தனது நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்து பலியானார்.

இச்சம்பம் தொடர்பாக அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தாளாளர் திவ்யா மற்றும் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் உள்பட ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory