» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

புதன் 30, ஏப்ரல் 2025 11:30:02 AM (IST)

2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்; 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாலும் ஆச்சரியமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அண்ணா அறிவாலயத்தில் மயிலை தொகுதி எம்எல்ஏ த.வேலு இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சியினர் எத்தகைய கூட்டணி வைத்து வந்தாலும் ஒரு கை பார்ப்போம் என்ற முடிவில்தான் இருக்கிறோம். நம்மை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், எத்தகைய கூட்டணி அமைத்தாலும் ஒரு கை பார்ப்போம்.

எங்கள் உயிரே போனாலும் சர்வாதிகாரத்துக்கு உறுதுணையாக இருக்க மாட்டோம் என்றார் கலைஞர். திமுகவின் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். முந்தைய ஆட்சியில் ஊர்ந்துகொண்டிருந்த தமிழ்நாடு இன்று திராவிட மாடல் ஆட்சியில் கம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்கிறது. மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே வழிகாட்டுகின்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். 2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாலும் ஆச்சரியமில்லை என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory